பிரிட்டனில் முதன்முறையாக தியேட்டர்களில் வெளியாகும் மாஸ்டர்: விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மெகாஹிட் திரைப்படமான 'மாஸ்டர்', பிரிட்டனில் முதன்முறையாக திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படுகிறது. வரும் ஜூன் மாதத்தில் இங்கிலாந்து முழுவதும் திரையரங்குகளில் இப்படத்தை ஹம்சினி என்டர்டெயின்மென்ட் மற்றும் அஹிம்சா பிலிம்ஸ் இணைந்து வெளியிட உள்ளன. கடந்த 2021-ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக பிரிட்டனில் உள்ள திரையரங்குகளில் மாஸ்டர் திரைப்படத்தை பார்க்கத் தவறிய ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனிருத்தின் அதிரடி இசை மற்றும் அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவான இப்படத்தின் திரையரங்கு விவரங்கள் மற்றும் டிக்கெட் முன்பதிவு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
· Hamsinient