மாஸ்டர் படத்தின் 'பொளக்கட்டும் பரபர' லிரிக் வீடியோ இன்று மதியம் 1 மணிக்கு ரிலீஸ்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படத்தின் பிரபல பாடலான 'பொளக்கட்டும் பரபர' லிரிக் வீடியோ இன்று மதியம் 1 மணிக்கு வெளியாகும் என சோனி மியூசிக் அறிவித்துள்ளது. அனிருத் இசையில் உருவான இந்த அதிரடி பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். விஜய் சேதுபதியின் வில்லன் கதாபாத்திரமான பவானிக்கான தீம் பாடலாக அமைந்த இந்த பாடல் ஏற்கனவே ஆடியோ வடிவில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. விஷ்ணு எடவன் வரிகளில் நாட்டுப்புற தாளத்துடன் கூடிய இந்த பாடல் வரிகள் கொண்ட வீடியோவை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர். லாக்டவுன் காலத்தில் வீட்டில் இருக்கும் ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் இந்த பாடல் வீடியோ வெளியிடப்படுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
· Sony Music South