அனல் பறக்கும் மாஸ்டர் தேர்ட் லுக்: விஜய், விஜய் சேதுபதி நேருக்கு நேர் மோதல் போஸ்டர் வெளியீடு!

அனல் பறக்கும் மாஸ்டர் தேர்ட் லுக்: விஜய், விஜய் சேதுபதி நேருக்கு நேர் மோதல் போஸ்டர் வெளியீடு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் 'மாஸ்டர்' திரைப்படத்தின் மூன்றாவது போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இணையத்தைக் கலக்கி வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியான இந்த போஸ்டரில் இருவரும் ஆக்ரோஷமாக நேருக்கு நேர் மோதும் காட்சி இடம்பெற்றுள்ளது. போஸ்டரில் விஜய்யும் விஜய் சேதுபதியும் ரத்தம் சொட்டும் முகத்துடன் ஆக்ரோஷமாக ஒருவரையொருவர் முறைத்துப் பார்க்கும் காட்சி ரசிகர்களிடையே மிரட்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையரங்குகளில் இந்த மோதல் காட்சி வரும்போது விசில் சத்தமும் கைதட்டலும் விண்ணைப் பிளக்கும் என்பது உறுதி என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இப்படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். கோடை விடுமுறையில் திரைக்கு வரவுள்ள மாஸ்டர் படத்தின் இந்த தேர்ட் லுக் போஸ்டர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

· Only Kollywood

பழைய செய்திகள்