அமெரிக்காவில் மாஸ்டர் இரண்டாவது வார வெற்றி: திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் அறிவிப்பு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' திரைப்படம் அமெரிக்க திரையரங்குகளில் இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வார இறுதி நாட்களை முன்னிட்டு அமெரிக்காவில் கூடுதல் சிறப்பு காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக விநியோகஸ்தர் ஹம்சினி என்டர்டெயின்மென்ட் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பிரபல திரையரங்கு சங்கிலிகளான சினிமார்க் மற்றும் ஏஎம்சி ஆகியவற்றில் கூடுதல் திரைகளில் மாஸ்டர் திரையிடப்படுகிறது. கொரோனா கால கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் திரையரங்குகளுக்கு மக்கள் உற்சாகமாக வந்து படத்தை ரசித்து வருகின்றனர். சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் அனிருத் இசையமைத்த இப்படத்தில் மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் அனல் பறக்கும் மோதல் காட்சிகள் வெளிநாட்டு ரசிகர்களை பெரிதும் கவர்ந்து நல்ல வசூலை ஈட்டி வருகிறது.
· Hamsinient