யூடியூபில் 10 லட்சம் பார்வைகளைக் கடந்து ட்ரெண்டாகும் 'மாயா லேடி' டீசர்!
ராகேஷ் வரே மற்றும் மதுமிதா சர்க்கார் இணைந்து நடித்துள்ள நகைச்சுவைக் காதல் திரைப்படமான 'மாயா லேடி' திரைப்படத்தின் டீசர், யூடியூபில் 10 லட்சம் பார்வைகளைக் கடந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக சோனி மியூசிக் சவுத் அறிவித்துள்ளது. கிரேஸி ஆன்ட்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். காதலும் நகைச்சுவையும் கலந்த கலகலப்பான காட்சிகளுடன் வெளியான டீசர், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. கதாநாயகன் மற்றும் கதாநாயகிக்கு இடையிலான சுவாரசியமான உரையாடல்களும் நகைச்சுவை தருணங்களும் டீசரின் சிறப்பம்சமாக அமைந்துள்ளன. துடிப்பான பாடல்களும் இளமை ததும்பும் காட்சிகளும் படத்திற்கு பலம் சேர்க்கின்றன. இத்திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கு சிறந்த பொழுதுபோக்காக அமையும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
· Sony Music South