4 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல்: மீசைய முறுக்கு 2 படக்குழுவினருக்கு வாழ்த்து

4 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல்: மீசைய முறுக்கு 2 படக்குழுவினருக்கு வாழ்த்து

ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, நடித்து, இசையமைத்துள்ள 'மீசைய முறுக்கு 2' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நான்கு நாட்களிலேயே 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது. செப்டம்பர் 25 அன்று வெளியான இத்திரைப்படம் இளைஞர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளது. இந்த அதிரடி வசூல் வெற்றியைத் தொடர்ந்து, திரைப்பட விநியோகஸ்தர் ஃபைவ் ஸ்டார் செந்தில் அவர்கள் இயக்குனர் மற்றும் கதாநாயகன் ஹிப்ஹாப் ஆதி மற்றும் தயாரிப்பாளர் சுந்தர் சி ஆகியோருக்கு நேரில் மாலை அணிவித்து தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த சந்திப்பின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இளைஞர்களை கவரும் துள்ளலான பாடல்களும் நகைச்சுவை கலந்த திரைக்கதையும் திரையரங்குகளில் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது. இரண்டாவது வாரத்திலும் கூடுதல் திரைகளில் இப்படம் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடும் என திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்