நாளை வெளியாகிறது மீசைய முறுக்கு 2 டிரெய்லர்: செப்டம்பர் 25 உலகமெங்கும் ரிலீஸ்!

நாளை வெளியாகிறது மீசைய முறுக்கு 2 டிரெய்லர்: செப்டம்பர் 25 உலகமெங்கும் ரிலீஸ்!

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் அதிரடி டிரெய்லர் நாளை அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது. வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி படம் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள சூழலில், இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவ்னி சினிமாக்ஸ் சார்பில் சுந்தர் சி, குஷ்பூ சுந்தர் மற்றும் பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதியுடன் இணைந்து ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடிக்கிறார். இளைஞர்களின் துடிப்பான இசைக்கனவு, கல்லூரி நட்பு, காதல் மற்றும் போராட்டங்களை மையமாகக் கொண்டு திரையரங்குகளில் ஒரு நேரடி கச்சேரி அனுபவத்தை தரும் வகையில் இந்த இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டுள்ளது. ஹிப்ஹாப் தமிழாவின் இசையில் உருவான பாடல்கள் ஏற்கனவே யூடியூப் மற்றும் ஸ்பாட்டிஃபை தளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், நாளை வெளியாகும் டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிறச் செய்யும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

· Idiamondbabu

பழைய செய்திகள்