சிக்மா திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா: சிறப்பு விருந்தினராக வருகை தரும் மெகாஸ்டார் சிரஞ்சீவி!
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியாகவுள்ள 'சிக்மா' திரைப்படத்தின் பிரம்மாண்ட ப்ரீ ரிலீஸ் விழா ஹைதராபாத்தில் நடைபெற உள்ள நிலையில், இதில் சிறப்பு விருந்தினராக மெகாஸ்டார் சிரஞ்சீவி கலந்து கொள்ளவுள்ளதாக படக்குழு எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் பிரம்மாண்ட விழாவில் சிரஞ்சீவி பங்கேற்பது தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா வட்டாரங்களில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சிரஞ்சீவியின் வருகை படத்தின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. வரும் அக்டோபர் 2 அன்று திரையரங்குகளில் வெளியாகும் சிக்மா படத்தின் விளம்பரப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
· Lyca Productions