2027 ஜனவரி 13 அன்று வெளியாகும் சிரஞ்சீவியின் 'காக்கா': தீபாவளி போஸ்டருடன் படக்குழு மாஸ் அறிவிப்பு!
மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் பாபி இயக்கத்தில் உருவாகும் 'காக்கா' திரைப்படம், 2027ஆம் ஆண்டு ஜனவரி 13 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தீபாவளி போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இத்தகவலை சினிமா செய்தித் தொடர்பாளர் வம்சி சேகர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். வால்டர் வீரய்யா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு மெகாஸ்டார் சிரஞ்சீவியும் இயக்குநர் பாபியும் மீண்டும் இணையும் திரைப்படம் என்பதால் 'காக்கா' படத்திற்கு தெலுங்கு திரையுலகில் இப்போதே அதீத எதிர்பார்ப்பு நிலவுகிறது. பக்கா மாஸ் ஆக்ஷன் என்டர்டெய்னராக உருவாகும் இப்படத்தில் சிரஞ்சீவியின் கதாபாத்திரம் அதிரடி வேட்டையாக இருக்கும் என்பதை தீபாவளி சிறப்பு போஸ்டர் உறுதி செய்துள்ளது. மேலும் இப்படத்தில் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2027 சங்கராந்தி பண்டிகை விருந்தாக ஜனவரி 13 அன்று களமிறங்கும் 'காக்கா', பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனைகளை நிகழ்த்தும் என சிரஞ்சீவியின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
· Ursvamsishekar