மலையாளத்தில் மெர்சல் வசூல் வேட்டை: சாட்டிலைட் உரிமையைக் கைப்பற்றிய டர்மரிக் மீடியா!

மலையாளத்தில் மெர்சல் வசூல் வேட்டை: சாட்டிலைட் உரிமையைக் கைப்பற்றிய டர்மரிக் மீடியா!

விஜய் நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்து வரும் 'மெர்சல்' திரைப்படத்தின் மலையாள டப்பிங் சேட்டிலைட் உரிமையை டர்மரிக் மீடியா நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படம் கேரள திரையரங்குகளிலும் வசூலில் புதிய சாதனை படைத்து வருகிறது. அட்லீ இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான இப்படம் வெளியான அனைத்து இடங்களிலும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று பிளாக்பஸ்டர் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. கேரளாவில் உள்ளூர் மலையாள படங்களுக்கு இணையாக விஜய் படங்களுக்கு மிகப்பெரிய கூட்டமும் வரவேற்பும் இருப்பதால், இப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தைக் கைப்பற்ற பலத்த போட்டி நிலவியது. இறுதியாக டர்மரிக் மீடியா இந்த சேட்டிலைட் உரிமத்தை வெற்றிகரமாக வாங்கியுள்ள நிலையில், கேரளாவின் முன்னணி தொலைக்காட்சி சேனல் ஒன்றில் விரைவில் இப்படம் பண்டிகை தின சிறப்பு திரைப்படமாக ஒளிபரப்பப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

· Turmericmediatm

பழைய செய்திகள்