கட்டா குஸ்தி 2 வெற்றி விழாவில் அமைச்சர் ராஜமோகன் பாராட்டு: தமிழ் சினிமா வளர்ச்சிக்கு அரசு துணை நிற்கும்!
விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடிப்பில் உருவான 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தின் 50வது நாள் வெற்றி விழாவில் மாண்புமிகு அமைச்சர் ராஜமோகன் கலந்துகொண்டு படக்குழுவினரைப் பாராட்டிப் பேசினார். கல்வித் துறையில் வேல்ஸ் கல்வி நிறுவனங்கள் வழியாகவும், தரமான தமிழ் திரைப்படங்கள் வழியாகவும் டாக்டர் ஐசரி கே. கணேஷ் ஆற்றி வரும் பங்களிப்பை அமைச்சர் வெகுவாகப் பாராட்டினார். மேலும் பெண்கள் முன்னேற்றம், விளையாட்டு ஆர்வம் மற்றும் குடும்ப சுயமரியாதையை பிரச்சார நெடி இல்லாமல் சிறந்த நகைச்சுவை பொழுதுபோக்காக வழங்கியதற்காக இயக்குநர் செல்லா அய்யாவு மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோருக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். தமிழ் திரைப்படத் துறையின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கும் புதிய முயற்சிகளுக்கும் தமிழக அரசு எப்போதும் முழு ஆதரவையும் வழங்கி துணை நிற்கும் என்று அமைச்சர் இந்த விழாவில் பெருமிதத்துடன் உறுதியளித்தார். விழாவில் கலந்துகொண்ட திரையுலகப் பிரபலங்கள் இதனை வரவேற்றனர்.
· VelsFilmIntl