தமிழ்த்திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே. தியாகராஜ பாகவதர்: 67வது நினைவு நாள்
தமிழ் திரைப்பட வரலாற்றின் முதல் சூப்பர் ஸ்டார் நடிகரும், புகழ்பெற்ற தியாகராஜ பாகவதர் அவர்களின் 67வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் தளத்தில் தியாகராஜ பாகவதரின் நினைவுகளைப் போற்றிப் பதிவிட்டுள்ளார். 1930 மற்றும் 40களில் தனது கம்பீரமான குரல் வளத்தாலும் வசீகர நடிப்பாலும் தமிழக மக்களைக் கட்டிப்போட்ட பெருமை தியாகராஜ பாகவதருக்கு உண்டு. அவர் நடித்த ஹரிதாஸ் திரைப்படம் சென்னை பிராட்வே திரையரங்கில் தொடர்ந்து மூன்று தீபாவளிகளைக் கடந்து மூன்று ஆண்டுகள் ஓடி வரலாற்றுச் சாதனை படைத்தது. கடந்த 1959 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக மறைந்த தியாகராஜ பாகவதரின் பாடல்களும் பாணியும் தமிழ் சினிமாவின் பொற்கால சுவடுகளாக இன்றும் ரசிகர்களின் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கின்றன.
· Actor Kayal Devaraj