இந்திய சினிமாவிலேயே முதல்முறை: மலைக்கோட்டை வாலிபன் dNFT அறிமுகம் செய்த மோகன்லால்!

இந்திய சினிமாவிலேயே முதல்முறை: மலைக்கோட்டை வாலிபன் dNFT அறிமுகம் செய்த மோகன்லால்!

லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள 'மலைக்கோட்டை வாலிபன்' திரைப்படத்திற்காக டைனமிக் என்எஃப்டி (dNFT) என்ற பிரத்யேக டிஜிட்டல் கலெக்டிபில்ஸை நடிகர் மோகன்லால் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார். இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல்முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய முயற்சி இது என்று மக்கள் தொடர்பு பிரதீஷ் சேகர் தகவல் பகிர்ந்துள்ளார். திரைப்பட விளம்பர உத்திகளில் அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் புகுத்தி ரசிகர்களுக்கு விசேஷமான டிஜிட்டல் சொத்துக்களை வழங்கும் வகையில் இந்த முயற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரசிகர்கள் படத்தின் பிரத்யேக டிஜிட்டல் போஸ்டர்கள், அரிய புகைப்படங்கள் மற்றும் சிறப்பு உள்ளடக்கங்களை முறைப்படி சொந்தமாக்கிக் கொள்ள முடியும். ஜனவரி 25 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த பான் இந்திய திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் தொடர்ந்து பல்வேறு புதுமைகளைப் புகுத்தி வருவது சினிமா மற்றும் தொழில்நுட்ப வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

· Propratheesh

பழைய செய்திகள்