ஜனவரி 25 அன்று மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன் ரிலீஸ்: உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
மோகன்லால் மற்றும் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி கூட்டணியில் உருவாகியுள்ள 'மலைக்கோட்டை வாலிபன்' திரைப்படம் ஜனவரி 25, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியான பிரதீஷ் சேகர் எக்ஸ் தளத்தில் வெளியீட்டு உற்சாகத்தை பகிர்ந்து திரையரங்கு கவுண்ட்டவுனைத் தொடங்கியுள்ளார். ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்ட இந்த திரைப்படம் மோகன்லாலின் திரைப்பயணத்தில் மிகவும் தனித்துவமான ஆக்ஷன் டிராமாவாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது வெளிநாடுகளிலும் கேரளாவிலும் திரையரங்கு முன்பதிவுகளும் விறுவிறுப்பாக தொடங்கி வருகின்றன. ஜான் அண்ட் மேரி கிரியேட்டிவ் நிறுவனத்தின் தயாரிப்பில் பான் இந்திய படமாக ரிலீஸாகும் மலைக்கோட்டை வாலிபன், குடியரசு தின விடுமுறை வாரத்தில் குடும்ப ரசிகர்களுக்கும் மோகன்லால் ரசிகர்களுக்கும் ஒரு பிரம்மாண்ட திரையரங்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Propratheesh