லூசிஃபருக்குப் பிறகு மீண்டும் இணையும் மோகன்லால், பிருத்விராஜ்: 'ப்ரோ டாடி' அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

லூசிஃபருக்குப் பிறகு மீண்டும் இணையும் மோகன்லால், பிருத்விராஜ்: 'ப்ரோ டாடி' அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வெற்றி பெற்ற 'லூசிஃபர்' திரைப்படத்தைத் தொடர்ந்து, பிருத்விராஜ் இயக்கும் இரண்டாவது படமான 'ப்ரோ டாடி' (Bro Daddy) படத்திலும் மோகன்லால் கதையின் நாயகனாக நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. ஆசீர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கும் இப்படம் குடும்பங்கள் ரசிக்கும் கலகலப்பான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகிறது. மோகன்லாலுடன் இணைந்து பிருத்விராஜும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். கல்யாணி பிரியதர்ஷன், மீனா உள்ளிட்ட பிரபலங்கள் இப்படத்தில் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. லூசிஃபர் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இணையும் இந்தக் கூட்டணி மலையாள திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் ஐதராபாத்தில் துவங்கவுள்ளதாகவும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படம் திரைக்கு வரும் என்றும் படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

· @kollywoodscope

பழைய செய்திகள்