மோகன்லாலின் 'சுந்தர ராவணன்': யூடியூபில் 2 மில்லியன் பார்வைகளைக் கடந்து ரசிகர்களின் ஆதரவு!

மோகன்லாலின் 'சுந்தர ராவணன்': யூடியூபில் 2 மில்லியன் பார்வைகளைக் கடந்து ரசிகர்களின் ஆதரவு!

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரமான மோகன்லால் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் திரைப்படம் 'சுந்தர ராவணன்' (அதிமனோகரம்). ஆஷிக் உஸ்மான் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் சிறப்புப் பார்வை வீடியோ வெளியாகி இணையத்தில் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் 20 லட்சம் (2 மில்லியன்) பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக பகிர்ந்துள்ளது. இப்படத்தில் மோகன்லாலுடன் நடிகை மீரா ஜாஸ்மின் மீண்டும் இணைந்து நடிப்பது கூடுதல் சிறப்பம்சமாகும். தருண் மூர்த்தி இயக்கத்தில், ஜேக்ஸ் பிஜாய் இசையமைப்பில் உருவாகும் இத்திரைப்படத்தின் காட்சிகள் மற்றும் மோகன்லாலின் வசீகரமான திரைத்தோற்றம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. முன்னதாக வெளியான அப்டேட்டுகள் மலையாள ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது. ரசிகர்களின் தீவிர ஆதரவால் உற்சாகமடைந்துள்ள படக்குழுவினர் அடுத்தகட்ட டீசர், பாடல்கள் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகளை விரைவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். குடும்பங்கள் கொண்டாடும் உணர்வுபூர்வமான கதைகளத்தில் மோகன்லாலின் தனித்துவமான நடிப்பில் உருவாகும் இத்திரைப்படம் திரையரங்குகளில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

· Apifilms

பழைய செய்திகள்