'மூக்குத்தி அம்மன் 2' பைரா கதாபாத்திரம்: மிரட்டலான மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு!

'மூக்குத்தி அம்மன் 2' பைரா கதாபாத்திரம்: மிரட்டலான மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு!

சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ள பைரா கதாபாத்திரத்தின் மேக்கிங் வீடியோவை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. தெலுங்கில் 'மகாசக்தி' என்ற பெயரிலும் இப்படம் தயாராகியுள்ளது. வெளியாகியுள்ள இந்த பிரத்யேக வீடியோவில், பைரா என்ற பவர்புல் கதாபாத்திரத்திற்காக ரெஜினா கசாண்ட்ரா எடுத்துக்கொண்ட பயிற்சிகள் மற்றும் பிரம்மாண்டமான அரங்க அமைப்புகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. நயன்தாரா அம்மன் வேடத்தில் தோன்ற, அவருக்கு எதிராக களமிறங்கும் வில்லி கதாபாத்திரத்தில் ரெஜினா நடித்துள்ள விதம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு கூட்டியுள்ளது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் மற்றும் அவ்னி சினிமாஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். யோகி பாபு, சுனில் மற்றும் துனியா விஜய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

· VelsFilmIntl

பழைய செய்திகள்