தீபாவளி பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பும் 'மூக்குத்தி அம்மன் 2': முதல் நாளை விட எகிறிய வசூல்!

தீபாவளி பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பும் 'மூக்குத்தி அம்மன் 2': முதல் நாளை விட எகிறிய வசூல்!

தீபாவளி விடுமுறை தினங்களில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள சுந்தர் சி மற்றும் நயன்தாரா கூட்டணியின் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வலுவான வசூல் வேட்டையைத் தொடர்ந்து வருகிறது. குடும்பங்கள் கொண்டாடும் பக்தி மற்றும் நகைச்சுவை பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு விடுமுறை நாட்களில் குடும்ப ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக முதல் நாள் வசூலை விட அடுத்தடுத்த நாட்களில் திரையரங்குகளில் கூட்டமும் வசூலும் அதிகரித்துள்ளதாக திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுந்தர் சியின் டிரேட்மார்க் நகைச்சுவையும் நயன்தாராவின் கம்பீரமான அம்மன் கதாபாத்திரமும் திரையில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தீபாவளி பண்டிகை விடுமுறை தினங்களை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் குடும்ப ஆடியன்ஸ் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இந்த வார இறுதியில் இப்படம் பெரிய அளவிலான பாக்ஸ் ஆபிஸ் சாதனையைப் படைக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் உற்சாகத்துடன் கணிக்கின்றனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்