கேரளாவில் கடும் போட்டியில் 'மூக்குத்தி அம்மன் 2': திரையரங்குகள் குறைவால் மெதுவான தொடக்கம்!

சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம், கேரள பாக்ஸ் ஆபீஸில் கடும் திரை இடப் போட்டியை எதிர்கொண்டுள்ளதாக மலையாளம் ரிவ்யூ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. ஒரே நேரத்தில் பல முக்கிய படங்கள் வெளியானதால், இப்படத்திற்கு கேரளாவில் குறைந்த அளவிலான திரைகளே கிடைத்துள்ளன. பிரம்மாண்ட தயாரிப்பான 'ராமாயணம்' மற்றும் சூர்யாவின் 'சீன்' ஆகிய திரைப்படங்கள் கேரள திரையரங்குகளில் பெருமளவு இடத்தைப் பிடித்துள்ளன. அத்துடன் மலையாள நேரடி வெளியீடான 'டிஸ்கோ' படமும் கணிசமான திரைகளில் திரையிடப்பட்டுள்ளது. இதனால் இந்த பெரிய படங்களுக்கு மத்தியில் நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன் 2' திரையிட திரைகள் கிடைப்பதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் படத்தின் தொடக்க நாள் வசூல் சற்றே மந்தமாக உள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். எனினும், குடும்ப ரசிகர்கள் மற்றும் நயன்தாராவின் ரசிகர்களின் ஆதரவைப் பொறுத்து அடுத்தடுத்த நாட்களில் காட்சிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

· MalayalamReview

பழைய செய்திகள்