கேரளாவில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை வெளியிடும் பாவனா ரிலீஸ் நிறுவனம்!
சினிமா மக்கள் தொடர்பாளர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் கேரள வெளியீடு குறித்த முக்கிய தகவலைப் பகிர்ந்துள்ளார். அதன்படி, கேரளாவில் இப்படத்தின் திரையரங்கு உரிமையை முன்னணி நிறுவனமான பாவனா ரிலீஸ் கைப்பற்றியுள்ளது. மலையாள திரையுலகில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'பிரேமலு' மற்றும் 'பெத்லகேம் குடும்ப யூனிட்' போன்ற வெற்றித் திரைப்படங்களை வெளியிட்ட விநியோகஸ்தர்களான பாவனா ரிலீஸ் நிறுவனம் மூலம் மூக்குத்தி அம்மன் 2 கேரளாவில் வெளியாகவிருப்பது படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. நயன்தாராவின் தீவிர ரசிகர் பட்டாளம் கேரளாவில் அதிகம் உள்ளதால், அங்குள்ள முக்கிய திரையரங்குகளில் இப்படத்திற்குச் சிறப்பான காட்சிகள் ஒதுக்கப்பட உள்ளன. தீபாவளி ரிலீசாக நவம்பர் 6 அன்று வெளியாகும் இப்படம் கேரளாவிலும் சிறப்பான வசூலை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
· Actor Kayal Devaraj