மூக்குத்தி அம்மன் 2 மகாசக்தி: ஹிப்ஹாப் தமிழா இசையில் உருவான முழு ஜூக் பாக்ஸ் வெளியீடு!
சுந்தர் சி இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மீண்டும் அம்மன் அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2 (மகாசக்தி). வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இப்படத்தின் முழு ஆடியோ ஜூக் பாக்ஸ் தற்போது அதிகாரப்பூர்வமாக யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். பக்தி பரவசமும் கமர்ஷியல் துள்ளலும் கலந்த பாடல்கள் இந்த ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளன. சுந்தர் சியின் டிரேட்மார்க் நகைச்சுவையுடன் கூடிய குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள இதில் ரெஜினா கசாண்ட்ரா, யோகி பாபு, சுனில் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தீபாவளி விருந்தாக வரும் நவம்பர் 6-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் படம் வெளியாகிறது. இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள பாடல்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழ்நாட்டில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை விநியோகம் செய்கிறது.
· VelsFilmIntl