நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன் 2': நாளை வெளியாகும் 'மகாசக்தி டிரான்ஸ்' வீடியோ பாடல்!

நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன் 2': நாளை வெளியாகும் 'மகாசக்தி டிரான்ஸ்' வீடியோ பாடல்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் சுந்தர் சி இயக்கியுள்ள 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் சிறப்புப் பாடலான 'மகாசக்தி டிரான்ஸ்' (Mahasakthi Trance) நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் அறிவித்துள்ளது. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே கணேஷ், அவுனி சினிமாஸ் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகத்தை சுந்தர் சி கூடுதல் சுவாரசியத்துடனும் ஆன்மிக கொண்டாட்டத்துடனும் இயக்கியுள்ளார். ரெஜினா கசாண்ட்ரா, யோகி பாபு, சுனில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தீபாவளி பண்டிகை விருந்தாக வரும் நவம்பர் 6 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் படம் வெளியாகவுள்ள நிலையில், தற்போது வெளியாகும் 'மகாசக்தி டிரான்ஸ்' பாடல் ரசிகர்களுக்குத் திரையரங்க அனுபவத்திற்கான உற்சாகமான முன்னோட்டமாக அமையும்.

· VelsFilmIntl

பழைய செய்திகள்