கேசினோ திரையரங்கில் நயன்தாராவின் பிரம்மாண்ட கட்அவுட்: தீபாவளிக்கு வரும் 'மூக்குத்தி அம்மன் 2'

கேசினோ திரையரங்கில் நயன்தாராவின் பிரம்மாண்ட கட்அவுட்: தீபாவளிக்கு வரும் 'மூக்குத்தி அம்மன் 2'

சுந்தர் சி இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் வரும் தீபாவளி விருந்தாக நவம்பர் 6-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி சென்னை அண்ணா சாலையிலுள்ள புகழ்பெற்ற கேசினோ திரையரங்கில் நயன்தாராவின் கம்பீரமான பிரம்மாண்ட கட்அவுட் நிறுவப்பட்டு ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளது. வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, யோகி பாபு, சுனில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். முன்னதாக வெளியான மூக்குத்தி அம்மன் முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் திரையரங்குகளில் மிகப்பெரிய குடும்ப கொண்டாட்டமாக அமையும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

· VelsFilmIntl

பழைய செய்திகள்