திரையரங்குகளில் நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன் 2' வெற்றி நடை: 24 மணி நேரத்தில் 60,000 டிக்கெட்டுகள் விற்பனை!

திரையரங்குகளில் நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன் 2' வெற்றி நடை: 24 மணி நேரத்தில் 60,000 டிக்கெட்டுகள் விற்பனை!

சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பக்தி மற்றும் ஃபேண்டஸி கலந்த சுவாரசியமான குடும்ப திரைப்படமாக வெளியாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புக்மைஷோ தளத்தில் சுமார் 60,000 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சுந்தர் சி இந்த இரண்டாம் பாகத்தை தனது பிரத்யேக கமர்ஷியல் அம்சங்கள், நகைச்சுவை காட்சிகள் மற்றும் பிரம்மாண்டமான பக்தி தருணங்களுடன் உருவாக்கியுள்ளார். அம்மன் வேடத்தில் நயன்தாராவின் கம்பீரமான தோற்றமும், சுந்தர் சியின் நகைச்சுவை ட்ரீட்மென்ட்டும் குடும்ப ரசிகர்களை திரையரங்குகளுக்கு இழுத்து வருகின்றன. வார இறுதி நாட்களில் குடும்பங்களுடன் திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. திரையரங்கு உரிமையாளர்கள் பல இடங்களில் கூடுதல் காட்சிகளை ஒதுக்கி வருகின்றனர். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் 'மூக்குத்தி அம்மன் 2' நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது.

· Only Kollywood

பழைய செய்திகள்