மூக்குத்தி அம்மன் 2: வெளிநாட்டு திரையரங்கு உரிமையை கைப்பற்றிய ஐங்கரன் நிறுவனம்!

மூக்குத்தி அம்மன் 2: வெளிநாட்டு திரையரங்கு உரிமையை கைப்பற்றிய ஐங்கரன் நிறுவனம்!

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் வெளிநாட்டு திரையரங்கு விநியோக உரிமையை முன்னணி நிறுவனங்களான ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் பிக் பிலிம்ஸ் ஆகியவை இணைந்து கைப்பற்றியுள்ளன. சுந்தர் சி இயக்கத்தில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மீண்டும் அம்மன் வேடத்தில் நடிக்கும் இப்படத்தின் மீது தொடக்கம் முதலே பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ள இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, யோகி பாபு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான முன்னோட்டம் ஏற்கனவே இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 6 அன்று இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. சர்வதேச அளவில் வலுவான விநியோக அமைப்பைக் கொண்டுள்ள ஐங்கரன் நிறுவனம் இப்படத்தை திரையிடவிருப்பது நயன்தாரா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

· VelsFilmIntl

பழைய செய்திகள்