புக்மைஷோவில் 'மூக்குத்தி அம்மன் 2' டிக்கெட் வேட்டை: ஒரே மணி நேரத்தில் 11 ஆயிரத்துக்கும் மேல் விற்பனை!
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் சுந்தர் சி இயக்கியுள்ள 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அபரிமிதமான முன்பதிவு வரவேற்பு கிடைத்துள்ளது. புக்மைஷோ தளத்தில் கடந்த ஒரே மணி நேரத்தில் மட்டும் 11,340 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளதாக மக்கள் தொடர்பாளர் பிரதீஷ் சேகர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6 அன்று படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் காலை 6 மணி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதனால் காலை முதலே நயன்தாரா ரசிகர்களும் குடும்ப ஆடியன்ஸும் டிக்கெட்டுகளை முண்டியடித்து முன்பதிவு செய்து வருகின்றனர். ஹிப்ஹாப் தமிழா இசையில் உருவான முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாவது பாகத்திலும் பக்தி மற்றும் காமெடி அம்சங்கள் நிறைந்துள்ளதால் இத்திரைப்படம் பண்டிகை விடுமுறையில் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Propratheesh