மூக்குத்தி அம்மன் 2 ரிலீசுக்கு இன்னும் 6 நாட்கள்: தீபாவளிக்கு நயன்தாரா தரும் தரிசனம்!

மூக்குத்தி அம்மன் 2 ரிலீசுக்கு இன்னும் 6 நாட்கள்: தீபாவளிக்கு நயன்தாரா தரும் தரிசனம்!

நயன்தாரா நடிப்பில் சுந்தர் சி இயக்கியுள்ள மூக்குத்தி அம்மன் 2 மகாசக்தி திரைப்படம் திரைக்கு வர இன்னும் 6 நாட்களே உள்ளன. தீபாவளி திருநாளை முன்னிட்டு குடும்பங்கள் கொண்டாடும் வகையில் நகைச்சுவையும் பக்தி பரவசமும் நிறைந்த பிரம்மாண்ட படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. சுந்தர் சியின் கலகலப்பான இயக்கத்தில் நயன்தாரா மீண்டும் அம்மன் அவதாரத்தில் தோன்றுவது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. திரளான முன்னணி நட்சத்திர பட்டாளத்துடன் பண்டிகை கால ஸ்பெஷலாக வரும் இப்படம் பற்றி சினிமா வட்டாரங்களில் பரவலான பேச்சு நிலவுகிறது. நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி விருந்தாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் மூக்குத்தி அம்மன் 2, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் திரையரங்குகளுக்கு இழுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்