திரையரங்குகளில் ஜெயிலர் 2 உடன் மூக்குத்தி அம்மன் 2 டீசர்: நயன்தாராவின் பிரம்மாண்ட தரிசனம்!
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் சுந்தர் சி இயக்கும் பக்தி மற்றும் நகைச்சுவை திரைப்படமான 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் டீசர் திரையரங்குகளில் இணைக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' படம் திரையிடப்படும் திரையரங்குகளில் இந்த டீசரை பெரிய திரையில் ரசிகர்கள் கண்டு மகிழலாம் என நடிகர் கயல் தேவராஜ் எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். ரெஜினா கசாண்ட்ரா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ள இந்த தெய்வீக பொழுதுபோக்குத் திரைப்படம் முதல் பாகத்தைப் போலவே அனைத்து தரப்பு குடும்ப ரசிகர்களையும் கவரும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. மூக்குத்தி அம்மனாக மீண்டும் நயன்தாரா தோன்றியுள்ள கம்பீரமான காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் வரும் நவம்பர் 6 ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
· Actor Kayal Devaraj