இணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2: முன்னோட்டத்திற்கு 20 லட்சம் பார்வைகள்!

இணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2: முன்னோட்டத்திற்கு 20 லட்சம் பார்வைகள்!

சினிமா மக்கள் தொடர்பாளர் நடிகர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் புதிய சாதனை குறித்து பதிவிட்டுள்ளார். அதன்படி, இப்படத்தின் 'வேர்ல்ட் ஆஃப் மகாசக்தி' முன்னோட்ட வீடியோ யூடியூபில் 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து ட்ரெண்டாகி வருகிறது. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா மீண்டும் அம்மன் அவதாரத்தில் தோன்றியுள்ளார். ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில் வெளியான இந்த முன்னோட்ட வீடியோவில் நயன்தாராவின் தெய்வீக தோற்றமும், சுந்தர் சியின் பிரம்மாண்ட உருவாக்கமும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 6 அன்று வெளியாகவுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இந்த வீடியோவின் வரவேற்பால் பல மடங்கு அதிகரித்துள்ளது. குழந்தைகள் மற்றும் குடும்ப ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடும் படமாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்