மூக்குத்தி அம்மன் 2 மகாசக்தி கிளிம்ப்ஸ் வெளியீடு: சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாராவின் தீபாவளி விருந்து!
சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா மீண்டும் அம்மன் வேடத்தில் நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் வேர்ல்ட் ஆஃப் மகாசக்தி (World of Mahasakthi) கிளிம்ப்ஸ் வீடியோவை தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 2026ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி விருந்தாக இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. இஷாரி கே. கணேஷின் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல், குஷ்பு சுந்தரின் அவ்னி சினிமாஸ் மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. நயன்தாராவுடன் ரெஜினா கெசாண்ட்ரா, யோகி பாபு, சுனில், துனியா விஜய், அபினயா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி இப்படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது வெளியாகியுள்ள கிளிம்ப்ஸ் வீடியோ தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் யூடியூப்பில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாம் பாகத்தை சுந்தர் சி இயக்குவது எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது. அடுத்தடுத்து வரவிருக்கும் டீசர், பாடல்கள் மற்றும் ரிலீஸ் அப்டேட்டுகளைத் தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
· VelsFilmIntl