நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 மகாசக்தி உலகத்தின் மிரட்டலான க்ளிம்ப்ஸ் வெளியீடு: தீபாவளிக்கு ரிலீஸ்!

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 மகாசக்தி உலகத்தின் மிரட்டலான க்ளிம்ப்ஸ் வெளியீடு: தீபாவளிக்கு ரிலீஸ்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் வேர்ல்ட் ஆஃப் மகாசக்தி வீடியோ க்ளிம்ப்ஸ் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களைப் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. அம்மன் கெட்டப்பில் நயன்தாராவின் தெய்வீகத் தோற்றம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் இந்த பக்தி மற்றும் நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே கணேஷ், குஷ்பு சுந்தரின் அவ்னி சினிமேக்ஸ் மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். மேலும் ரெஜினா கசாண்ட்ரா, யோகி பாபு, சுனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தீபாவளி விருந்தாக வரும் நவம்பர் 6 ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள இப்படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சிகள், முதல் பாகத்தை விட இருமடங்கு விஷுவல் பிரம்மாண்டத்தோடு படம் இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்