ஜியோஹாட்ஸ்டாரில் தமிழிலும் வெளியானது மோர்டல் காம்பாட் 2 திரைப்படம்

ஜியோஹாட்ஸ்டாரில் தமிழிலும் வெளியானது மோர்டல் காம்பாட் 2 திரைப்படம்

உலகப் புகழ்பெற்ற வீடியோ கேம் பின்னணியில் அதிரடி சண்டை காட்சிகளுடன் உருவான 'மோர்டல் காம்பாட் 2' (Mortal Kombat II) திரைப்படம், ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் உள்ள ஹெச்பிஓ மேக்ஸ் பிரிவில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆகத் தொடங்கியுள்ளது. உயிர் வாழ்வதற்கான இறுதிப் போரை மையமாகக் கொண்ட இத்திரைப்படம் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. முதல் பாகத்தின் அதிரடி வெற்றியைத் தொடர்ந்து, மேலும் பல புதிய கதாபாத்திரங்கள் மற்றும் சண்டைக் களங்களுடன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஆக்ஷன் பிரியர்களைக் கவரும் வகையில் மார்ஷியல் ஆர்ட்ஸ் காட்சிகள் நேர்த்தியாகப் படமாக்கப்பட்டுள்ளன. ஹாலிவுட் ஆக்ஷன் ரசிகர்களுக்கும் கேமிங் பிரியர்களுக்கும் ஏற்ற விருந்தாக அமைந்துள்ள இப்படத்தை, தமிழ் டப்பிங்கில் உள்ளூர் ரசிகர்கள் தங்கள் வீடுகளிலேயே கண்டுகளிக்க முடியும். ஜியோஹாட்ஸ்டாரில் இன்று முதல் முழுப் படமும் காணக் கிடைக்கிறது.

· Jiohotstar

பழைய செய்திகள்