தமிழிலும் பார்க்கலாம்: ஜியோஹாட்ஸ்டாரில் வெளியானது பிரம்மாண்ட ஆக்ஷன் படம் மோர்டல் காம்பாட் 2!
சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற அதிரடி சாகச திரைப்படமான மோர்டல் காம்பாட் 2, தற்போது ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் அதிகாரப்பூர்வமாக ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கியுள்ளது. மனித இனத்தைக் காக்கும் பயங்கரமான போர்க்களக் கதையை மையமாகக் கொண்ட இப்படம் ஹெச்பிஓ மேக்ஸ் பிரிவில் வெளியாகியுள்ளதாக ஜியோஹாட்ஸ்டார் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது. குறிப்பாக தென்னிந்திய ரசிகர்களைக் கவரும் வகையில் ஆங்கிலம் மற்றும் இந்தியுடன் சேர்த்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் இந்த திரைப்படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. திகில் கலந்த அதிரடி சண்டைக் காட்சிகள், மிரட்டலான கிராபிக்ஸ் மற்றும் அசாத்திய போர் வியூகங்கள் ஆகியவை ஆக்ஷன் பிரியர்களை வெகுவாக ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன. முந்தைய பாகத்தைப் போலவே இதிலும் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான அனுபவம் காத்திருக்கிறது. ஹாலிவுட் சினிமாக்களை தங்களது சொந்த மொழியான தமிழில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் உடனடியாக ஜியோஹாட்ஸ்டாரில் இப்படத்தை கண்டு ரசித்து வருகின்றனர்.
· Jiohotstar