3 மில்லியன் பார்வைகளைக் கடந்து யூடியூபில் ட்ரெண்டாகும் 'டிஎன்கே' படத்தின் டிரெய்லர்!

3 மில்லியன் பார்வைகளைக் கடந்து யூடியூபில் ட்ரெண்டாகும் 'டிஎன்கே' படத்தின் டிரெய்லர்!

யூடியூப் பிரபலம் மற்றும் துடிப்பான நடிகரான மௌலி நடிப்பில் உருவாகியுள்ள 'டிஎன்கே' (DNK) திரைப்படத்தின் டிரெய்லர் யூடியூபில் வெளியாகி வெறும் சில மணி நேரங்களிலேயே 3 மில்லியன் பார்வைகளைக் கடந்து இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. நகைச்சுவையும் துள்ளலான இளமைத் துடிப்பும் கலந்த இந்த டிரெய்லருக்கு சினிமா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர். இளைஞர்களைக் கவரும் வகையிலான எதார்த்தமான நகைச்சுவை வசனங்களும், கலகலப்பான திரைக்கதை அமைப்பும் இந்த டிரெய்லரின் முக்கிய ஈர்ப்பாக அமைந்துள்ளன. யூடியூப் வீடியோக்கள் மூலம் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள மௌலி, வெள்ளித்திரையிலும் தனது நகைச்சுவை முத்திரையைப் பதிப்பார் என டிரெய்லரை பார்த்த பலரும் உற்சாகத்துடன் பாராட்டி வருகின்றனர். இப்படம் வரும் நவம்பர் 13ஆம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. தியேட்டருக்கு வரும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து நல்ல பொழுதுபோக்கை தரும் படமாக 'டிஎன்கே' அமையும் என்பதால் சினிமா பிரியர்கள் மத்தியில் தற்போதே எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன.

· Ursvamsishekar

பழைய செய்திகள்