'இத்தனை டான்ஸ் ஸ்டெப்ஸ் ஆடுவேன்னு நினைக்கல': 'தொங்க நா கொடுகு' பாடல் வெளியீட்டில் மௌலி கலகலப்பு!

'இத்தனை டான்ஸ் ஸ்டெப்ஸ் ஆடுவேன்னு நினைக்கல': 'தொங்க நா கொடுகு' பாடல் வெளியீட்டில் மௌலி கலகலப்பு!

'தொங்க நா கொடுகு' திரைப்படத்தின் முதல் பாடலான 'ஓ மை காட்' வெளியீட்டு விழாவில் நாயகன் மௌலி பேசிய நகைச்சுவையான பேச்சு இணையத்தில் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. இப்பாடலில் தான் இத்தனை நடன அசைவுகளை ஆடுவேன் என்று வாழ்க்கையிலேயே நினைத்துப் பார்த்ததில்லை என்று மேடையில் அவர் கலகலப்பாகப் பகிர்ந்துள்ளார். இளைஞர்களைக் கவரும் துள்ளலான இசை மற்றும் நடனத்துடன் வெளியாகியுள்ள 'ஓ மை காட்' பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முழுநீள நகைச்சுவை மற்றும் குடும்பப் பொழுதுபோக்குக் கதைக் களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் மௌலியின் எனர்ஜியான நடிப்பு ரசிகர்களுக்குப் புதுவித விருந்தாக அமையும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர். ரசிகர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று வரும் 'தொங்க நா கொடுகு' திரைப்படம் வரும் நவம்பர் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. திரையரங்குகளில் ரசிகர்களைச் சிரிக்க வைக்க படக்குழு முழுவீச்சில் தயாராகி வருகிறது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்