பாடகர் மனோவின் மகன் கதாநாயகனாக அறிமுகமாகும் 'மௌன மொழிகள்': கலர்ஃபுல் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

பாடகர் மனோவின் மகன் கதாநாயகனாக அறிமுகமாகும் 'மௌன மொழிகள்': கலர்ஃபுல் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தமிழ் திரையுலகில் ஆயிரக்கணக்கான ஹிட் பாடல்களைப் பாடி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பிரபல பின்னணிப் பாடகர் மனோ. தற்போது அவரது மகன் துருவன் மனோ கதாநாயகனாக திரையுலகில் அறிமுகமாகிறார். அவர் நடிக்கும் மௌன மொழிகள் திரைப்படத்தின் கலர்ஃபுல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. ஸ்ரீவாரி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் ஏ.சி.சௌந்தர் இயக்குகிறார். துடிப்பான இளமை, கல்லூரி கால நட்பு மற்றும் உணர்வுப்பூர்வமான காதல் பின்னணியில் உருவாகும் இக்கதையில் துருவன் மனோவின் தோற்றம் சினிரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. முதல் படத்திலேயே ஒரு வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்துள்ள அவருக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவீச்சில் நிறைவடைந்துள்ள நிலையில், டீசர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டுத் தேதிகள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட உள்ளன. பாடகர் மனோவின் மகன் வெள்ளித்திரையில் நாயகனாக சாதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

· Idiamondbabu

பழைய செய்திகள்