டிசம்பர் 11-ல் ரிலீஸாகும் 'மிஸ்டர் பாரத்': வயிறு குலுங்க வைக்கும் அசத்தல் ட்ரெய்லர் வெளியீடு!

டிசம்பர் 11-ல் ரிலீஸாகும் 'மிஸ்டர் பாரத்': வயிறு குலுங்க வைக்கும் அசத்தல் ட்ரெய்லர் வெளியீடு!

நடிகர் பாரத் மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் நடிப்பில் உருவாகியுள்ள பொழுதுபோக்கு திரைப்படமான 'மிஸ்டர் பாரத்' (Mr Bhaarath) வரும் டிசம்பர் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என அறிவிக்கப்பட்டு, படத்தின் விறுவிறுப்பான ட்ரெய்லரும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் நிரஞ்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் மற்றும் தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ஆதித்யா கதிர், சுந்தர்ராஜன், பாலா உள்ளிட்ட பல நகைச்சுவை நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளதால், ட்ரெய்லர் முழுக்க கலகலப்பான நகைச்சுவை வெடிகளும் சுவாரசியமான காட்சிகளும் அணிவகுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. டிசம்பர் மாத இறுதி விடுமுறை கொண்டாட்டத்திற்கு ஏற்ற குடும்பப் பாங்கான காமெடி படமாக 'மிஸ்டர் பாரத்' திரைக்கு வரவுள்ளது. திரையரங்குகளில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கத் தயாராகி வரும் இப்படத்தின் ரிலீஸை சினிமா பிரியர்களும் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

· Apifilms

பழைய செய்திகள்