கலகலப்பான காமெடி கலாட்டாவுடன் வெளியான 'மிஸ்டர் பாரத்' டிரெய்லர்: டிசம்பர் 11-ல் தியேட்டர் ரிலீஸ்!
நடிகர் பரத் மற்றும் சம்யுக்தா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'மிஸ்டர் பாரத்' திரைப்படத்தின் கலகலப்பான டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இயக்குநர் நிரஞ்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் நகைச்சுவையும் சுவாரசியமான குடும்பத் தருணங்களும் நிறைந்த ஒரு முழுமையான பொழுதுபோக்குத் திரைப்படமாக தயாராகியுள்ளது. பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி-ஸ்குவாட், பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் இணைந்து வழங்கும் இப்படத்தின் டிரெய்லரில் முன்னணி நட்சத்திரங்களின் டைமிங் காமெடி காட்சிகள் பார்வையாளர்களைக் கவர்ந்து சிரிக்க வைக்கின்றன. இளம் தலைமுறையினரையும் குடும்பப் பார்வையாளர்களையும் கவரும் விதத்தில் உருவாகியுள்ள 'மிஸ்டர் பாரத்' திரைப்படம் வரும் டிசம்பர் 11 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் பரத்தின் துடிப்பான முழு நீள காமெடி என்டர்டெய்னராக இது அமைந்திருப்பது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திரையரங்குகளில் இந்த படம் ரசிகர்களுக்கு நல்ல ஒரு சிரிப்பு விருந்தாக அமையும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
· Only Kollywood