எம்.எஸ். பாஸ்கரின் விடியும் காத்திரு: முதல் பாடல் ரைஸ் ஆஃப் தி சேவியர் வெளியானது

எம்.எஸ். பாஸ்கரின் விடியும் காத்திரு: முதல் பாடல் ரைஸ் ஆஃப் தி சேவியர் வெளியானது

தேசிய விருது வென்ற நடிகர் எம்.எஸ். பாஸ்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள விடியும் காத்திரு திரைப்படத்தின் முதல் பாடலான ரைஸ் ஆஃப் தி சேவியர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சத்யா சி இசையமைப்பில் உருவாகியுள்ள இப்பாடல் கம்பீரமான குரல்களுடனும் விறுவிறுப்பான இசைக்கோர்ப்புகளுடனும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அரவிந்த ராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ரவிச்சந்திரன் மற்றும் ஆய்வா ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளனர். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை உத்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. எம்.எஸ். பாஸ்கரின் தீவிரமான கதாபாத்திரம் இப்படத்தில் பெரிய பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பாடல் லஹரி மியூசிக் யூடியூப் தளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், படத்தின் டிரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்