எம்.எஸ். பாஸ்கர் நடிக்கும் 'விடியும் காத்திரு': நாளை மாலை டிரெய்லர் வெளியீடு என அறிவிப்பு!

எம்.எஸ். பாஸ்கர் நடிக்கும் 'விடியும் காத்திரு': நாளை மாலை டிரெய்லர் வெளியீடு என அறிவிப்பு!

தேசிய விருது பெற்ற மூத்த நடிகர் எம்.எஸ். பாஸ்கர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள 'விடியும் காத்திரு' திரைப்படத்தின் டிரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது. இத்தகவலை நடிகர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். எஸ்.ஹரி உத்ரா இயக்கியுள்ள இப்படத்தை ரவிச்சந்திரன் மற்றும் அய்வா ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளனர். உத்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் திரையரங்குகளில் படத்தை வெளியிடுகிறது. மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சி. சத்யா இசையமைத்துள்ளார். அரவிந்த ராஜன், தாமோதரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை வியக்க வைக்கும் எம்.எஸ். பாஸ்கர் இப்படத்தில் ஒரு அழுத்தமான உணர்வுபூர்வமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சஸ்பென்ஸ் மற்றும் எமோஷனல் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களுக்கான உரிமத்தை லஹரி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. நாளை மாலை வெளியாகும் டிரெய்லருடன் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்