எம்.எஸ். பாஸ்கர் நடிக்கும் விடியும் காத்திரு: விறுவிறுப்பான டிரெய்லர் வெளியானது
தேசிய விருது பெற்ற முன்னணி மூத்த குணச்சித்திர நடிகர் எம்.எஸ். பாஸ்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'விடியும் காத்திரு' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகி இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. உத்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ். ஹரி உத்ரா இப்படத்தை திரையரங்குகளில் வெளியிடவுள்ளார். ரவிச்சந்திரன் மற்றும் ஐவா ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில் எம்.எஸ். பாஸ்கருடன் இணைந்து அரவிந்த ராஜன் உள்ளிட்ட பல கலைஞர்கள் நடித்துள்ளனர். ஒரு எதிர்பாராத இரவுப் பொழுதில் சிக்கும் மனிதர்களின் உணர்ச்சிகளையும் சவால்களையும் மையமாகக் கொண்டு இந்த விறுவிறுப்பான த்ரில்லர் டிரெய்லர் அமைக்கப்பட்டுள்ளது. டிரெய்லரில் வரும் ஒவ்வொரு காட்சியும் அடுத்தது என்ன நடக்கும் என்ற ஆவலை ரசிகர்களிடம் தூண்டுகிறது. இப்படத்திற்கு சி. சத்யா இசையமைத்துள்ளார். அவரது பின்னணி இசை மிரட்டலான உணர்வை உருவாக்குகிறது. சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் தனது இயல்பான நடிப்பால் அனைவரையும் வியக்க வைக்கும் எம்.எஸ். பாஸ்கர், இப்படத்திலும் தனது அசாத்திய நடிப்பால் பார்வையாளர்களைக் கவருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
· Actor Kayal Devaraj