முகேன் ராவ் நடிக்கும் புதிய படம்: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை ரிலீஸ்!
பிக்பாஸ் புகழ் முகேன் ராவ் மற்றும் தேஜு அஸ்வினி நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது. எஸ்.எஸ்.ஆர் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது முதல் தயாரிப்பாக இப்படத்தை உருவாக்குகிறது. இயக்குநர் கவின் இயக்கும் இப்படத்தில் ஆதித்யா கதிர், முனீஷ்காந்த் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் களம் இறங்கியுள்ளனர். ஜென் மார்ட்டின் இப்படத்திற்கு இசையமைக்க, சரிகம சவுத் நிறுவனம் இசை உரிமையைப் பெற்றுள்ளது. குடும்பங்களும் இளைஞர்களும் ரசிக்கும் வகையில் கலகலப்பான பொழுதுபோக்குப் படமாக இது தயாராகி வருவதால், நாளை வெளியாகவுள்ள ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கூடியுள்ளது.
· Actor Kayal Devaraj