முகேன் ராவ், தான்யா ஹோப் இணையும் 'நிறம்': நவம்பர் 27 திரையரங்குகளில் ரிலீஸ்!
பிக்பாஸ் புகழ் முகேன் ராவ் கதாநாயகனாக நடித்துள்ள 'நிறம்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கே ஸ்கொயர் சினிமாஸ் தயாரிப்பில் க்ரிஷ் டி.கே இயக்கியுள்ள இப்படம், வரும் நவம்பர் 27 அன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என படக்குழு எக்ஸ் தளத்தில் உற்சாகமாகப் பகிர்ந்துள்ளது. இப்படத்தில் முகேன் ராவுடன் இணைந்து தான்யா ஹோப் மற்றும் பிரீத்தி ஷர்மா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் நிதின் சத்யா, சுரேகா வாணி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிராமிய மற்றும் மெலடி பாடல்களுக்குப் பெயர்பெற்ற இசையமைப்பாளர் டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்க, விவேகா பாடல்களை எழுதியுள்ளார். மங்கிலி பாடியுள்ள பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. காதல், குடும்ப உணர்வுகள் மற்றும் வண்ணமயமான பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களைக் கவரும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பாடல்கள் ஜீ மியூசிக் சவுத் தளத்தில் வெளியாகி வரும் நிலையில், அடுத்தடுத்து டீசர் மற்றும் டிரெய்லர் அறிவிப்புகள் வரவுள்ளன.
· Idiamondbabu