முகேன் ராவ் படத்தில் இணைந்த முனீஷ்காந்த்: எஸ்.எஸ்.ஆர் என்டர்டெயின்மென்ட் அறிவிப்பு!

முகேன் ராவ் படத்தில் இணைந்த முனீஷ்காந்த்: எஸ்.எஸ்.ஆர் என்டர்டெயின்மென்ட் அறிவிப்பு!

எஸ்.எஸ்.ஆர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் முகேன் ராவ் மற்றும் தேஜு அஸ்வினி நடிக்கும் புதிய திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் முனீஷ்காந்த் இணைந்துள்ளார். படக்குழுவினர் வெளியிட்டுள்ள புதிய வீடியோ மூலம் இந்த அதிகாரப்பூர்வ தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இயக்குநர் கவின் இயக்கும் இப்படத்தில் குடும்பங்கள் ரசிக்கும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. முனீஷ்காந்தின் வரவு திரைப்படத்திற்கு கூடுதல் கலகலப்பையும் சுவாரசியத்தையும் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜென் மார்ட்டின் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மற்ற நட்சத்திரங்கள் குறித்த விபரங்களையும் படக்குழு அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்