மைத்ரி மற்றும் ஜி ஸ்குவாட் இணையும் புதிய படம்: தீபாவளிக்கு நாளை வெளியாகும் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்!

மைத்ரி மற்றும் ஜி ஸ்குவாட் இணையும் புதிய படம்: தீபாவளிக்கு நாளை வெளியாகும் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி-ஸ்குவாட் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் புதிய தமிழ் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக இப்படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படத்தை இயக்கி அனைவரின் பாராட்டையும் பெற்ற இயக்குநர் விஷால் வெங்கட் இப்படத்தை இயக்குகிறார். விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்ற கார்கி திரைப்படத்தின் கதாசிரியரான ஹரிஹரன் ராஜு இப்படத்திற்கு திரைக்கதை அமைத்துள்ளார். இப்படத்தில் மூத்த நடிகர் நாசர், ரெஜினா கெசாண்ட்ரா மற்றும் திலக் ரமேஷ் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். திறமையான படைப்பாளிகளும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களும் ஒன்றிணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு கோலிவுட் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது. நாளை வெளியாகும் முதல் பார்வை போஸ்டர் படத்தின் களம் என்ன என்பதை வெளிப்படுத்தும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

· Ursvamsishekar

பழைய செய்திகள்