மைத்ரி மூவி மேக்கர்ஸ் உடன் இணையும் லோகேஷின் ஜி ஸ்குவாட்: ரெஜினா நடிக்கும் படத்தின் தலைப்பு விரைவில்!
தென்னிந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் 'ஜி ஸ்குவாட்' (G Squad) நிறுவனம் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இது தொடர்பான தகவலைக் காயல் தேவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரெஜினா கசாண்ட்ரா, நாசர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படத்தை விஷால் வெங்கட் இயக்குகிறார். ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். எளிய பூஜையுடன் அமைதியாகத் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடையும் நிலைக்கு வந்துள்ளது. தரமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து தயாரிக்கும் லோகேஷின் ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால் இதற்குக் கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிக விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
· Actor Kayal Devaraj