மைத்ரி மற்றும் ஜி ஸ்குவாட் இணையும் படம்: படப்பிடிப்பு நிறைவு!

மைத்ரி மற்றும் ஜி ஸ்குவாட் இணையும் படம்: படப்பிடிப்பு நிறைவு!

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் (G Squad) நிறுவனம் மற்றும் பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விஷால் வெங்கட் இயக்கும் இந்த திரைப்படத்தில் நாசர், ரெஜினா கெசாண்ட்ரா, திலக் ரமேஷ், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் மலையாளத்தில் பல வெற்றிப் பாடல்களைக் கொடுத்த ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இரண்டு முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் கைகோர்த்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது. படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிக விரைவில் வெளியாகும் என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது. அடுத்தடுத்த அப்டேட்டுகளைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்