மைத்ரி மூவி மேக்கர்ஸின் புதிய காதல் படைப்பு: ஜெய் ஜஸ்தி மற்றும் மேதா மேகா இணையும் படம்!

மைத்ரி மூவி மேக்கர்ஸின் புதிய காதல் படைப்பு: ஜெய் ஜஸ்தி மற்றும் மேதா மேகா இணையும் படம்!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், புதிய திறமைகளை அறிமுகப்படுத்தும் புதிய ரொமாண்டிக் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்ற தகவலை வம்சி சேகர் பகிர்ந்துள்ளார். இப்படத்தில் இளம் ஜோடிகளாக ஜெய் ஜஸ்தி மற்றும் மேதா மேகா ஆகியோர் கதையின் நாயகன் நாயகியாக அறிமுகமாகின்றனர். இப்படத்தை பிருத்வி வனம் இயக்க, திரைக்கதையை ஃபில்மி மகேஷ் உருவாக்கியுள்ளார். இன்றைய தலைமுறையினரின் துடிப்பான காதலையும் இளமை ததும்பும் எமோஷன்களையும் மையமாகக் கொண்டு ஒரு அழகிய காதல் காவியமாக இப்படம் செதுக்கப்பட்டு வருகிறது. படத்தின் டைட்டில் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிக விரைவில் வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து பல பிரம்மாண்ட வெற்றிப் படங்களைத் தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த புத்தம் புதிய காதலர் ஜோடியை அறிமுகப்படுத்துவது சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் பெற்றுள்ளது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்