அர்ஜுன் தாஸின் ஜான் டோ: நான் போதுமா பாடல் வெளியீடு
அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஜான் டோ திரைப்படத்தின் நான் போதுமா என்ற முதல் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இதனை நடிகர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இயக்குனர் மதுமிதா இயக்கத்தில் பாகுபலி பட தயாரிப்பு நிறுவனமான அர்கா மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில் இப்படம் உருவாகிறது. ஏஜிஎஸ் சினிமாஸ் இப்படத்தை தமிழகத்தில் வெளியிடுகிறது. த ஆர்ட்டிஸ்ட் 404 இசையமைத்துள்ள இப்பாடலில், நடிகர் அர்ஜுன் தாஸ் தனது கம்பீரமான குரலில் ராப் வரிகளைப் பாடி அசத்தியுள்ளார். மாளவிகா பெண் குரலில் பாடியுள்ளார். மனதிற்குள் நடக்கும் உள் போராட்டங்களை மையமாகக் கொண்ட வரிகள் இளைஞர்களை வெகுவாக ஈர்த்துள்ளன. நவம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ஜான் டோ படத்தின் டீசர் மற்றும் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
· Actor Kayal Devaraj