மாஸ் அவதாரத்தில் நாக சைதன்யா: அஜனீஷ் லோக்நாத் இசையில் 'விருஷகர்மா' படத்தின் 'ஸ்வாக் ஆஃப் அர்ஜுன்' பாடல் வெளியீடு!
யுவ சாம்ராட் நாக சைதன்யா இதுவரை பார்த்திராத புதிய மாஸ் அவதாரத்தில் நடித்துள்ள 'விருஷகர்மா' திரைப்படத்திலிருந்து 'ஸ்வாக் ஆஃப் அர்ஜுன்' என்ற துள்ளலான பாடல் அதிகாரப்பூர்வமாக யூடியூபில் வெளியாகியுள்ளது. வெளியான சில நிமிடங்களிலேயே இப்பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. காந்தாரா புகழ் பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இந்தப் பாடலுக்கு அபிநவ கவி வரிகள் எழுதியுள்ளார். விஜய் பின்னி அட்டகாசமான நடன அமைப்பை வழங்கியுள்ளார். நாக சைதன்யாவின் ஸ்டைலான தோற்றமும் துடிப்பான நடன அசைவுகளும் ரசிகர்களைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த சாகச ஆக்ஷன் திரைப்படம் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'ஸ்வாக் ஆஃப் அர்ஜுன்' வெளியானதைத் தொடர்ந்து, படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் உச்சத்தை எட்டியுள்ளது.
· Ursvamsishekar